காரைக்கால் மாவட்டம் காசாக்குடி மேட்டை சேர்ந்த மீனவர் செந்தில்குமார்(35) உள்பட மூவர் கடலுக்கு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை கடலுக்கு மீன் பிடி தொழிலுக்கு சென்றனர்.
இதில் மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்த போது திடீரென விசைப்படகில் இருந்து மீனவர் செந்தில்குமார் நிலைதடுமாறி தவறி கடலில் விழுந்தார்.இதையடுத்து உடனடியாக மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விழுந்த இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு பிறகு செந்தில்குமாரின் உடலை மீட்டு எடுத்தனர். உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.செந்தில்குமார் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக கூறினர்.மேலும் இந்த சம்பவம் குறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மீன்பிடிக்க செல்ல இருந்த மீனவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.