காரைக்கால் மாவட்டத்தில் வாகனங்கள் பெருக்கம் மற்றும் நாகூர்,நாகப்பட்டினம்,வேளாங்கண்
சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து திருமலைராயன்பட்டினம் புறவழிச்சாலை அமைந்துள்ளது.சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ள இந்தச் சாலையில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது.
ஆனால் புறவழி சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால் சாலையானது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர்.இதையடுத்து தொகுதி திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் முயற்சியால் சாலையை 7. மீட்டர் அகலப்படுத்தி மேம்படுத்துவதற்காக ரூ.5 கோடியே 63 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் பணிகள் தொடங்கப்பட்டது.
இதற்காக கிழக்கு புறவழிச்சாலை தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்டது. சாலை பணிகள் நிறைவு பெறும் வகையில் திருப்பட்டினம் வழியாக போக்குவரத்து இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலை