காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.இங்கு நவராத்திரி நான்காம் நாள் முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால்,பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.