மனகவலைகளே இருதய நோய்க்கு ஆளாகி விடுகிறது
புதுச்சேரி அரசு நல வழித்துறை காரை மாவட்ட சுகாதார இயக்கம் சார்பில் அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.செவிலியர் அதிகாரி சிஸ்லியா ரோஸி வரவேற்புரை ஆற்றினார்.மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை தாங்கினார்.சித்த மருத்துவர் மலர்விழி,மருந்தாளுநர் அச்சுத லிங்கம் சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ அதிகார அரவிந்த் பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 உலக இதய நாள் அனுசரிக்கப்படுகிறது.இதயம் 24 மணி நேரமும் உறங்காமல் இயங்குவதால் தான் நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்ய முடிகிறது.நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
தேவையற்ற மனக் கவலைகளை மனதில் ஏற்றுக் கொள்கிறோம்.அதன் விளைவு இருதய நோய்க்கு ஆளாகி வருகிறது.மாரடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு இடைஞ்சல் என்றால் மட்டுமே நாம் அதைப் பற்றி கவலைப் படுகிறோம்.முறையான உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை என்ற ஆரோக்கியத்தை கடைபிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.நாம் எப்போதும் மகிழ்ச்சியுடன் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள பழக வேண்டும் என்று கூறினார்.
இதய நோய் வருவதற்கான முக்கிய காரணங்களான புகைப்பழக்கம், மதுப்பழக்கம், துரித உணவுகள் சாப்பிடுதல், ஒழுங்கற்ற வேலை நேரம், தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, உடற்பயிற்சி செய்யாதிருத்தல், நீண்ட நேரத்துக்கு ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறினார்.
சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் இருதய நோய் வராமல் தடுக்க கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என கூறினார்.உடற்பயிற்சி,யோகா செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள் ஆஷா பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.