காரைக்கால் ஸ்ரீ சோமநாதர் ஆலயத்தில்
நவராத்திரி விழாவை முன்னிட்டு
துர்க்கை அம்மனுக்கு 50 கிலோ காய்கறி அலங்காரம்
காரைக்கால்,அக்.20:
காரைக்காலில் பிரசித்திபெற்ற ஸ்ரீ சோமநாதர் ஆலயம் உள்ளது.இங்கு நவராத்திரி திருவிழா கடந்த 5 ஐந்தாம் நாள் நடைபெற்று வருகிறது.நேற்று ஐந்தாம் நாள் நவராத்திரி நாளை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சுமார் 50 கிலோ எடையுள்ள காய்கறியால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு பால்,பன்னீர்,சந்தனம்,மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து சுமார் 50 கிலோ எடையுள்ள காய்கறியால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.