நவீன் பாரத்
Oct 20 2023
செய்திகள்
காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் நகர குழுமம் சார்பாக அம்ரூத் திட்டத்தின் மூலம் ஜிஏஎஸ் மாஸ்டர் பிளான் அமைப்பது சம்பந்தமான 8-ஆவது கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நேற்று காரைக்காலில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம்,திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா ,நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தார்.மேலும் கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற 8-ஆவது கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்பு கூட்டதில் காரைக்கால் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள்,2041 ஆம் ஆண்டுக்கான காரைக்கால் மேம்பாடு,காரைக்கால் மாஸ்டர் பிளான் திட்டத்தில் கிராம புற பகுதிகளையும் இணைக்கும் ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பேசுகையில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இத்திட்டம் ஒரு உந்து கோலாக அமையும் எனவும் விரைவில் இதை அமுல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.160 ஸ்கொயர் கிலோமீட்டர் உள்ள காரைக்கால் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் நகர குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.