காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஸ்ரீ சனி பகவான் தனி சன்னதியில் இருப்பதால் உலகம் முழுவதிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.குறிப்பாக வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.மேலும் இந்த கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணியானது மூன்று கட்டங்களாக நடைபெறும்.அதன்படி நேற்று முதல் கட்டமாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் உண்டியல் எண்ணும் பணிகள் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் ஆகியோர் முன்னிலையில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அரசால் திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகள் ரூ.90 ஆயிரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.