நல்லாத்தூரில் முட்டைக் குழம்பு சாப்பிட்டு விட்டு உறங்கப் போய், நள்ளிரவில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நல்லாத்தூர் சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(51) இவர் தனது மனைவி செலின்மேரி(42), மகன் ஜோஸ் அல்காஸ்(15), மகள் ஜோஸ் ஏஞ்சல்(11) ஆகியோருடன் வசித்து வருகிறார். செலின்மேரிக்கு சர்க்கரை னாய் காரணமாக கடந்த 10 வருடங்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.
செலின்மேரிக்கு இரவு உணவு செரிமானம் ஆகாமல் இருந்ததால், சாப்பிட்டபின் வாசலில் சற்று நேரம் அமர்ந்த பின் உறங்கச் செல்வது வழக்கமாம். கடந்த 28-ஆம் தேதி முட்டைக்குழம்பு சோறு சாப்பிட்டு விட்டு பிள்ளைகள் உறங்கச் சென்றனர். செலின்மேரி தனது கணவர் அற்புதராஜுடன் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டி இருந்துவிட்டு இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றார்.
நள்ளிரவு உறுமியபடி செலின்மேரி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்திருந்ததை அற்புதராஜ் பார்த்துவிட்டு விசாரித்துள்ளார். அசையாமல் உட்கார்ந்திருந்த செலின்மேரியை பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் உமா என்பவர் மூலம் அற்புதராஜ் காரில் ஏற்றுக் கொண்டு நெடுங்காடு ஆரம்ப நலவழி மையத்தில் காண்பித்தார்.
பரிசோதித்த மருத்துவர் செலின்மேரி ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து நெடுங்காடு காவல் நிலையத்தில் அற்புதராஜ் புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செளிணிமேரியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.