காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த கண்ணப்பூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு அறிவியல் கண்காட்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.இக்கண்காட்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் மூலம் மொத்தம் 62 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பள்ளியின் நுழைவாயில் அருகே மாணவ,மாணவிகள் உருவாக்கிய மனித எலும்புக்கூடு ஒன்று சைக்கிள் ஓட்டி வரவேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.அறிவியல் படைப்புகளை காண வந்த பெற்றோர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.மேலும் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றனர்.விழாவின் நிறைவாக மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது .விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.