காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த நிரவி கிராமம் உள்ளது. இந்த ஊரின் பொதுமக்களுக்காக கிராமத்தின் நடுவே மணிகூண்டு உள்ளது.இதனை சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் அபுபக்கர் என்பவர் சிங்கப்பூரில் இருந்து ஜெர்மன் நாட்டை சேர்ந்த கடிகாரத்தை வாங்கி அனுப்பி 1960ல் 55 அடி உயரத்தில் இந்த மணிகுண்டு அமைத்தார்.
அறை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒலிக்கும் இதன் ஓசையானது ஊர் எல்லையில் உள்ள மக்கள் காதுவரைக்கும் ஒலித்து கொண்டிருந்தது.இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. இதை பழுது பார்க்க 20 ஆண்டுகளுக்குப் பிறகு அபூபக்கர் குடும்பத்தை சேர்ந்த கனி என்பவர் இதை பழுது நீக்க சென்னையில் பழங்கால இயந்திர கடிகாரங்களை சேகரித்து தனது வீட்டில் அருங்காட்சியம் அமைத்து கின்னஸ் சாதனை புரிந்த ராபர்ட் கென்னடியை அனுகினார்.
இதனை அடுத்து கென்னடி நாகராஜ் என்ற மெக்கானிக்கை மூலம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.பழுது சரி செய்யபட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த மணிக்கூண்டின் ஒலியை இசைக்கப்பட்டது.இதனை கேட்டு ஆச்சரியமடைந்த ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடிகார கோபுரம் பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு அதன் அசல் மகிமை மீட்டெடுக்கப்பட்டது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.