காரைக்கால் நகரின் பெரியப்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம்.உள்ளது இங்கு ஆண்டுத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி. காரைக்கால் செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பீட்டர் பால், கொடிக்கு மந்திரிப்பு செய்து, கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.இதையடுத்து ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது.
ஆண்டு திருவிழாவின் புனித பிரான்சிஸ் அசிசியார் மின் அலங்கார தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.முன்னதாக தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.தேர் பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார்கள் சின்னப்பன், ஆல்பர்ட் ரமேஷ், சிம்சன் பாப்பு. வில்லியம் டார்லிங் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.