காரைக்கால் மாவட்டம்,திருநள்ளாரில் உலக பிரசித்திபெற்ற ஸ்ரீ தர்பாரேன்ஸ்வரர் தேவஸ்தானம்,ஸ்ரீ சனிபகவான் கோவில் உள்ளது.இங்கு சனிக்கிழமைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்நடைபெற்றது .பின்னர் சனி பகவானுக்கு வஜ்ரங்கி சேவையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.புரட்டாசி நான்காவது கடைசி சனிக்கிழமை மற்றும் அம்மாவாசை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.