காரைக்கால் அடுத்த காரை கோவில்பத்து பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது.இங்கு நேற்று மஹாலய அமாவாசையை முன்னிட்டு நேத்ர தசாபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்கு
சிறப்பு அலங்காரம் மற்றும் சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது.
முன்னதாக நேத்ர தசாபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்கு பலவித வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து மஹா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.