காரைக்கால் அடுத்த திருவேட்டக்குடியில் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழக அமைந்துள்ளது.இங்கு புதுச்சேரியில் கலாச்சார குழு சார்பாக நடத்தப்படும் இரண்டு நாள் கலாச்சார விழா கல்லூரி வளாகத்திலுள்ள கி. ரா அரங்கத்தில் இன்று நேற்று முன்தினம் தொடங்கியது.
இக்கலாச்சார விழாவினை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி உடலியல் மையத்தின் துணை இயக்குநர் பேராசிரியை டாக்டர் ஆர்.ஷோபனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ.சுந்தரவரதன் முன்னிலை வகித்தார்.இணையவழி வாயிலாக
கலந்து கொண்ட கழகத்தின் இயக்குனர் முனைவர்.உஷா நடேசன்(பொ) கலந்து கொண்டு பேசினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் கழகத்தின் பதிவாளர் சுந்தரவரதன்,கலாச்சார குழுவின் தலைவர் முனைவர் குமரன் மற்றும்
மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கலாச்சார விழாவில் காரைக்கால், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு சுற்றியுள்ள 13 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.மேலும் இக்கலாச்சார விழாவில் இசைக் கச்சேரிகள், நடனப் போட்டிகள், கலைக் கண்காட்சிகள், இலக்கிய நிகழ்வுகள்,பேஷன் ஷோக்கள், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு உற்சாகமான நிகழ்வுகள் நடைபெற்றது.நேற்றுடன் நிறைவு பெற்ற கலாச்சார விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.