புதுச்சேரி தொழில் மற்றும் வணிக வரித்துறை இயக்குனர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
இந்திய அரசு நாடு முழுவதும் நகர எரிவாயு விநியோக வலையமைப்புகளை விரிவுபடுத்துகிறது.இதன் மூலம் தூய்மையான இயற்கை எரிவாயு குழாய் மூலம் வீடுகள்,தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் மேலும் இயற்கை எரிவாயுவை போக்குவரத்து எரிபொருளாக பயன்படுத்துவதற்கும் ஏதுவாகும்.
மேலும் இவ்வசதியை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு புதுச்சேரி நகர எரிவாயு விநியோக கொள்கை 2023 ஐ புதுச்சேரி அரசு கடந்த 9ஆம் தேதி தொழில் மற்றும் வணிக துறை மூலம் அறிவித்தது.
இக்கொள்கையின் நோக்கமானது,புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயற்கை எரிவாயுவை பசுமை மற்றும் சுத்தமான எரிபொருளாக உபாயோகிப்பதை ஊக்குவிக்கவும்,இயற்கை எரிவாயுவை நம்பகமான மற்றும் தடையின்றி வழங்குவதற்கும்,தொழில்துறை,வணி
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் எரிவாயு வலையமைப்புகளை அமைப்பதற்கும்,இயக்குவதற்கும் பின்வரும் ஏஜென்சிகளுக்கு பிராந்திய வாரியாக ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி புதுச்சேரியில் ஈஸ்ட் கோஸ்ட் நேச்சுரல் கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் பிரைவேட் லிமிடெட்,காரைக்காலில் டோரன்ட் கேஸ் பிரைவேட் லிமிடெட்,மாஹேவில் இந்தியன் ஆயில் அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏனாமில் எச்சிஜி ஏனாம் பிரைவேட் லிமிடெட் ஆகிய ஏஜென்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு புதுச்சேரி தொழில் மற்றும் வணிக வரித்துறை இயக்குனர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.