மனைவியை விரட்டி விட்டு
தொழிலாளி தற்கொலை
திருநள்ளாறை அடுத்த செருமாவிலங்கை கிராமத்தில் போதையில் மனைவி, மகளை வீட்டை விட்டு துரத்தியடித்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெடுங்காட்டை அடுத்த செருமாவிலங்கையைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், இவரது மனைவி சந்தானமேரி (44) பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் புஷ்பராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் புஷ்பராஜ் குடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த புஷ்பராஜ் வீடு குப்பையாக அலங்கோலமாகக் கிடப்பதாக மனைவி சந்தானமேரி ,மகள் லிட் லார்ட் ஆப் குயினையும் வீட்டை விட்டு வெளியில் போகச் சொன்னார்.
தொடர்ந்து வீட்டில் இருந்தால் சண்டை வலுக்கும் எனக் கருதிய சந்தானமேரி தனது மகளுடன் சற்றுத் தொலைவில் உறவினர் மேரி வீட்டுக்குச் சென்றுவிட்டார். அன்று மலை 5 மணிக்கு ஊர் கூட்டம் சம்பந்தமாக அவ்வூரைச் சேர்ந்த ஜான்பீட்டர் புஷ்பராஜ் வீட்டுக் கதவைத் தட்டியும் திறக்கவில்லை.
கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது சந்தானமேரியின் சேலையில் புஷ்பராஜ் வீட்டு உத்தரத்து கம்பியில் தூக்கில் தொங்குவது தெரிந்தது. இதுகுறித்து சந்தானமேரி கொடுத்த புகாரின்பேரில் திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று புஷ்பராஜின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.