ரூ.2 கோடியில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் இயந்திரம்.
அமைச்சர் சந்திரபிரியங்கா துவக்கி வைத்தார்.
காரைக்கால்,செப்.28:
காரைக்காலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.காரைக்கால் அடுத்த பறவை பேட்டையில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் புதிதாக ரூ.2 கோடி மதிப்பில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய இயந்திரத்தை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில்,மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.மேலும் நிகழ்ச்சியில் காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா,உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் சுபாஷ்,எச்.ஆர் ஸ்கொயர் நிறுவனத்தைச் சேர்ந்த நரேந்திரன்,ராஜு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த இயந்திரத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மலிவு விலையில் வழங்கப்படும் என கூறினர்.