நாகப்பட்டினம்-இலங்கை இடையே
கப்பல் போக்குவரத்து தொடக்கம்!
-இம்மாத இறுதியில் தொடங்குகிறது.
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும் பரிச்சர்த்த முறை கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்துக்கான ஆய்வுகள் நடந்தன. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பயணிகள் கப்பல் வந்து செல்வதற்கான இமிகிரேஷன், கஸ்டம்ஸ் போன்ற அலுவலகங்கள் இல்லை.
மேலும், இது சரக்குக்கப்பல் வந்து செல்லும் துறைமுகம் ஆதலால், பயணிகள் கப்பலால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கும் என தனியார் துறைமுக நிர்வாகம் கருதியதாகக் கூறப்படுகிறது. புதுச்சேரி அரசு இந்தக் கப்பல் போக்குவரத்துக்கு முயற்சிகள் மேற்கொண்டபோது மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனின் ஒப்புதல் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்ததாகத் தெரிகிறது.
இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசு மேற்கண்ட கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஃபெர்ரி - #செரியபானி (#Cheriyapani) யுடன் பேசசு வார்த்தை நடத்தியது. நாகபட்டினத்திலிருந்து #காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள இந்த பேசசுவார்த்தையில் முடிவானது.
இதையடுத்து 150 பயணிகள் செல்லும் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினத்தில் இருந்து இயக்க ஃபெர்ரி - #செரியபானி (#Cheriyapani) நிறுவனம் முடிவெடுத்தது. இந்தக் கப்பலின் பயண நேரம் மூன்றரை மணி நேரம் ஆகும். இம்மாத இறுதிக்குள் இந்த கப்பலின் முதல் போக்குவரத்து தொடங்குகிறது. இப்பயணியர் படகை ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இயக்குகிறது.