புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை,வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை இணைந்து கடந்த 5 ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் பள்ளி மாணவ மாணவிகள் மூலம் போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோட்டுச்சேரியில் அமைந்துள்ள வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை இணை வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் பேசுகையில் மாணவர்களாகிய நீங்கள் முதலில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றும் மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் போதை என்பது மது மட்டுமல்ல தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கும் என்று கூறினார்.
பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட பள்ளிகளை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பொதுமக்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்திய வண்ணம் பதாதைகள் ஏந்தி சென்றனர்.