காரைக்கால் மாவட்ட மின் துறையில் பல மாதங்களாக மின் துறை ஊழியர்கள் பற்றாகுறை நிலவி வருகிறது.இதனால் மின் அளவீடுகள்,மின் சார்ந்த பணிகளை மேற்கொள்ள தாமதம் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.காலி பணியிடங்களை நிரப்ப கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே காலி பணியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்ப வலியுறுத்தி 200க்கு மேற்பட்ட மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காரைக்காலில் உள்ள மின் துறை தலைமை அலுவலக வாயிலில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறுகையில் மின்துறை ஊழியர்களுக்கு ஆள் பற்றாக்குறை காரணமாக பணிச்சுமை அதிகமாக உள்ளதால் மன அழுத்தம் ஏற்படகிறது .அரசு இந்த பிரச்சனைக்கு கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் ஆள்பற்ற குறையை நிவர்த்தி செய்திட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.