Saturday 19 04 2025

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். முதல்வர் ரங்கசாமி பேச்சு.
பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும்
நவீன் பாரத் Oct 06 2023 செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். முதல்வர் ரங்கசாமி பேச்சு.

      புதுச்சேரி அரசு, மத்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில், ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி,காரைக்கால் விநாயக மிஷன் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை  சார்பில் மருத்துவ தொழில் முனைவோர் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி கருவடிக்குப்பம் இசிஆர் சாலையில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று துவங்கியது.

     இதில் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் கணேசன் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ஜான்குமார் எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவங்கி வைத்து பேசியதாவது:

     புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதேபோல், மருத்துவ கல்லூரிகளும் சிறந்த கல்லூரியாக இருக்க வேண்டும். நல்ல பேராசிரியர்கள், மருத்துவர்கள் இருக்க வேண்டும் என அடிக்கடி நான் கூறி கொண்டே இருப்பேன்.

        புதுவையில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களிடம் முன்பு எம்பிபிஎஸ் இடங்களை கேட்பேன். அவர்கள் கொடுக்க மாட்டார்கள். இப்பினும், அவர்களிடம் பேசி 120 எம்பிபிஎஸ் இடங்களை ஆண்டுதோறும் வாங்கி விடுவேன். ஆனால், இன்று நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை தேசிய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் நிரப்பப்படுகிறது. இதனால் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடங்களை பெற முடியவில்லை.

         எங்களுக்கு ஒரு வெறி உண்டு. ஏனென்றால் கடந்த காலங்களில் ஒரே ஒரு ஜிப்மர் மருத்தவ கல்லூரி மட்டுமே புதுவையில் இருந்தது. அங்கு 12 எம்பிபிஎஸ் இடங்கள்தான் கிடைக்கும். மிகவும் சிறப்பட்டு அங்கு கூடுதலாக எம்பிபிஎஸ் இடங்களை பெற்றோம். அப்போதெல்லாம் ஒரு ஆண்டுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் மருத்துவர்கள்தான் புதுவையில் பிடித்துவிட்டு வெளியே வந்தார்கள். அதேபோல், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன் கூட இல்லாமல் இருந்தது. இதனால் மருத்தவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் வெளியில் இருந்து தான் வர வேண்டும் என்ற சூழல் இருந்தது.

          இதனால் அதிகமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் வர வேண்டும். இதற்கு தனியார் பங்களிப்பு அவசியம் என்பதை எண்ணி நிறைய தனியார் மருத்துவ கல்லூரிகள் துவங்க அனுமதி கொடுத்தோம். மேலும், புதுவையிலேயே ஜிப்மருக்கு இணையான அரசு மருத்துவ கல்லூரி கட்ட வேண்டும் என்று கூறினேன். நிறைய செலவாகும். இதை செய்ய முடியுமா என்று அப்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கேட்டார்கள்.  என்னால் செய்யும் என்று அப்படி கட்டப்பட்டு கொண்டுவரப்பட்டதுதான் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி. அந்த கல்லூரிதான் கொரோனா காலத்தில் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் செயல்பட்டது. இதனால் புதுவையில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.

      புதுவையில் யார் மருத்துவ கல்லூரி துவங்க வந்தாலும் உடனே அனுமதி கொடுக்கிறேன் என்று கூறுவேன். ஏனென்றால், மருத்துவர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பதிலும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒவ்வொரு தனியார் மருத்துவ கல்லூரியிலும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்.

         புதுச்சேரியில் ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். மருத்துவ வசதி இருக்கிறது. சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். அதில் எந்த குறைபாடும் இல்லை. இருப்பினும், நியூரோ சர்ஜரி உள்ளிட்ட ஒருசில சிகிச்சைகளுக்காக சென்னை செல்ல வேண்டியுள்ளது. இப்போது ஜிப்மரில் நியூரோ சர்ஜரி உள்ளது. இருந்தாலும் நல்ல அறுவை சிகிச்சை செய்யக் கூடிய மருத்துவர்கள் புதுவைக்கு வேண்டும்.

        மற்றவர்கள் சிறப்பு மருத்துவ வசதிக்காக புதுச்சேரியை நாடி வர வேண்டும் என்பது எங்களது எண்ணம். அதற்கு தேவையான உதவிகளை எப்போதும் அரசு செய்யும். இன்ப சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, கல்வி சுற்றுலா மூலம் வருவாயை ஈட்டுகின்ற நிலையில் புதுச்சேரி உள்ளது. புதுச்சேரியில் புதிய கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்பது அரசின் எண்ணம். மாணவர்கள், இளைஞர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து மாநிலத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

     புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். நோய் முற்றிவிட்டால் மிகவும் சிரமம் ஏற்படும். இந்நிலையில் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை துவங்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 150 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும் என கூறியுள்ளார்கள். மேலும், அரசு மருத்துவ கல்லூரியிலும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவத்தை கொண்டு வரவும் பேசி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

       இவ்விழாவில் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம் இயக்குனர் அனுராதா கணேசன், துணைவேந்தர் சுதிர், உறுப்பினர் சுரேஷ் சாமுவேல், நிதி ஆயோக் கூடுதல் செயலர் ரமணன் ராமநாதன், ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி டீன் ராகேஷ் செகல், இயக்குனர் விஷ்ணு பட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நேற்று துவங்கிய இக்கண்காட்சி இன்று (6ம் தேதி) வரை நடக்கிறது.


Related News