காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் ஒய்வு பெற்றவர்கள் தகுதியுடையோர் விண்ணப்பிக்க அழைப்பு.
இது குறித்து காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற தகுதியுடைய அலுவலர்களை நியமிக்க உள்ளது.விண்ணப்பிக்க விருப்பம் உள்ள அலுவலர்கள் karaikal.gov.in அல்லது www.kptc.in என்ற இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பம், புதுச்சேரி நிதித்துறையின் விதிமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 13 அக்டோபர் 2023 அன்று மாலை 5 மணிக்குள் முதல்வர், காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி - 609609 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.