திருநள்ளாறு ஆன்மீக தளத்தில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்.
காரைக்கால் மாவட்டம்,திருநள்ளாறு என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவில் வருவது ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம்,ஸ்ரீ சனி பகவான் கோவில் ஆகும்.ஆனால் தற்போது கோவிலுக்கு வருகை தரும் பொதுமக்களை சாக்கடைகள் நிறைந்த வாய்க்கால்களின் வரவேற்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆன்மீக தளமாக விளங்கும் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம்,ஸ்ரீ சனி பகவான் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சனி கிழமைகளில் இக்கோவிலில் விசேஷம் என்பதால் வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு தான் திருநள்ளாறு ஆன்மீக நகரத்திற்குள் நுழையும் சூழலும்,திருநள்ளாறு கோவிலுக்கு செல்லும் அணைத்து மாட வீதிகளிலும் செல்லும் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது என பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்வதற்காக பொதுப்பணித்துறை மூலம் வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாக்கடை வடிகாலில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைப்பால் தேங்கும் கழிவுநீர் சாலையில் நிரம்பி வழிகிறது.இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு கோவிலுக்கு செல்லும் சூழல் உருவாகி உள்ளது.மேலும் அருகருகே குடியிருப்போர் வீடுகளும் உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கெடுக்கு வழிவகை செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளும் கடமைக்கு சாலையை பெருக்கி விட்டு போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் அருகே உள்ள நூலாரு வாய்க்காலில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள்,பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் வீசுவதும்,மது பிரியர்கள் மது பாட்டில்களை உடைத்து வீசுவதுமாக உள்ளனர்.இதனால் நூலாரு வாய்க்கால் தனது அழகுரு நிலையை இழந்து சாக்கடையாக மாறி கிடக்கிறது.வாய்க்கால்களை பராமரிக்கும் பொதுப்பணித்துறையினர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாய்க்காலில் கிடைக்கும் ஆகாய தாமரைகளை அகற்றி வருகின்றனர்.அதுவும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பணிகள் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆன்மீக தலத்தில் பொதுமக்களின் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் நூலாரு வாய்களை முழுவதுமாக தூர்வாரி பொதுமக்கள் பயன்படும் வாய்க்கலாக மாற்ற வேண்டும் எனவும்,திருநள்ளாறு பகுதியில் உள்ள அணைத்து சாக்கடை வடிகால்களை முழுமையாக புனரமைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.