அம்பகரத்தூரில்
அலங்கார ரூபிணியாய் பத்ரகாளியம்மன்
பக்தர்கள் திரண்டு வந்து பரவச தரிசனம்
புகழ்பெற்ற அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அலங்கார ரூபிணியாய் தோன்றிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
அம்பகரத்தூர் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி செவ்வாய்க் கிழமை என்பதால் அம்பகரத்தூர் அதன் சுற்று வட்டார தமிழக மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து பக்தர்கள் வாகனங்களில் வந்து குழுமினர்.
கோயிலில் வரிசையில் நின்று பட்டாடை, வண்ண மலரலங்காரத்தில் "அலங்கார ரூபிணியாய்" காட்சியளித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமியை சிரமமின்றி தரிசனம் செய்ய அறங்காவல் குழுவின் சார்பில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.