ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில்
முதல்வர் மு.க ஸ்டாலின்
பெயரில் மகள் அர்ச்சனை
திருநள்ளாரில் புகழ் பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக தனது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தயார் துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் பெயரில் மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை செய்தார். சுற்றுக் கோயில்களின் தரிசனத்துக்குப் பின் சனி பகவான் ஆலயத்தில் நடைபெற்ற விசேஷ அபிஷேகம், பரிகார பூஜையிலும் பங்கேற்றார்.
தரிசனத்தின் போது காரைக்கால் மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் மற்றும் தி.மு.கவினர் உடன் இருந்தனர்.