நாயை கல்லால் அடித்தவருக்கு "அச்சச்சோ"
நெடுங்காடு அருகே நாயை காலால் அடித்த கொத்தனாரை சூழ்ந்து கொண்டு தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
நாய்யைல் வடமட்டத்தை அடுத்த புத்தகுடி கன்னிகோயில் தெருவைச் சேர்ந்தவர் சத்யராஜ்(24) கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு வீடு திரும்பியபோது இவரது வீட்டு வாசலில் பக்கத்துவீட்டு நாய் நிற்பது தெரிந்தது.
தன்னைப் பார்த்து குரைத்ததால் எரிச்சலடைந்த சத்யராஜ் அந்த நாயை கல்லால் அடித்தார். குரைத்த நாய், கல்லடிபட்டு கத்திய சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டிலிருந்து ஆனந்த், அஜித், வேம்பு, ஓடி வந்தனர். கல்லும்,கையுமாக நின்ற சத்யராஜிடம், "எதற்காக எங்கள் வீட்டு நாயை கல்லால் அடித்தாய்?"என்று கேட்டனர்.
இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றி தகராறில் முடிந்தது. மூவரும் சேர்ந்து சத்யராஜை கையால் தாக்கினர். அப்போது, சத்யராஜின் மர்ம உறுப்பில் ஆனந்த் கையால் அடித்துள்ளார். இதனால் வலி தாளமுடியாமல் நெடுங்காடு ஆரம்ப சுகாதார மையத்தில் சத்யராஜ் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து நெடுங்காடு காவல் நிலையத்தில் சத்யராஜ் கொடுத்த புகாரின்பேரில், நெடுங்காடு காவல் உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.