புதுச்சேரியில்
நுகர்வோர் விவரங்களை பதிவேற்றினால்
மத்திய அரசின் எரிவாயு மானியம் ஓகே!
-புதுச்சேரி குடிமைப் பொருள்துறை இயக்குனர் அறிவிப்பு
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் சமையல் எரிவாயு மானிய திட்டத்தை செயல்படுத்த சமையல் எரிவாயு பெறும் நுகர்வோர்களின் விவரங்களை எல்பிஜி ஏஜென்சிகள் பகிர்வதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
எனினும் காலதாமதத்தை தவிர்க்க மற்றும் உடனே இத்திட்டத்தை செயல்படுத்த நுகர்வோர்கள் https://pdsswo.py.gov.in/helpdesk,https://dcsca. py.gov.in என்ற இணையதளம் மற்றும் தொலைபேசி செயலி மூலமாக பிராந்தியம்,கேஸ் ஏஜென்சியின் பெயர் நுகர்வோர் எண், தொலைபேசி எண், ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை பதிவிடும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணையதளம் மற்றும் செயலி பற்றி ஏதாவது விளக்கம் தேவைப்படும் நுகர்வோர்கள் 99440.52612,9944052718 என்ற தொலைபேசி எண்ணை கொண்டு தங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.