கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடியில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழக உள்ளது. இந்த நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் அண்ட்
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
துறை சார்பில் இருநாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.
இத்துறை மூலம் சென்சார்கள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெட்வொர்க்குகளில்
முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் அறிஞர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர். முதன்மை விருந்தினராக வந்திருந்த காரைக்கால் ஒ.என்.ஜி.சி காவிரி அசட் நிர்வாக இயக்குனர் உதய் பாஸ்வான் தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் சென்னை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக துணை இயக்குனர் விஞ்ஞானி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காரைக்கால் என்.ஐ.டி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் உஷா நடேசன்(பொ) தலைமை வகித்தார்.
மேலும் கருத்தரங்கில் புதுச்சேரி என்ஐடி பதிவாளர் சுந்தரவர்தன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். இந்த சர்வதேச மாநாட்டில் சென்சார்கள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெட்வொர்க்குகள் ஆகிய துறைகளின் நிபுணர்கள், வல்லுநர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களும் தத்தமது ஆய்வு முடிவுகளை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.
இந்த சர்வதேச மாநாட்டில் பல்வேறு கருத்துப் பரிமாற்றம், சமீபத்திய ஆராய்ச்சி பற்றிய விவாதங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளுக்கான தளம் குறித்த கருத்துக் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இரண்டு நாட்களில், பங்கேற்பாளர்கள் நுண்ணறிவு மிக்க விவாதங்கள், முக்கிய உரைகள் மற்றும் விளக்கக் காட்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், சென்சார்கள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெட்வொர்க்குகளின் களத்தில் அறிவு மற்றும் தொழில் நுட்பத்தின் முன்னேற்றம் குறித்த சந்தேகங்களுக்கும் ஆய்வாளர்கள் விளக்கங்கள் வழங்கப்படும். இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவாயிலாக பங்கு பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.