நிரவி அருகே அதிவேகத்தில் மூவர் அமர்ந்து வந்த பைக் மோதி, ஏ.டி.எம்மில் பணம் எடுக்க நடந்து சென்ற பெண் காலில் முறிவு ஏற்பட்டது.
நிரவியை அடுத்த விழிதியூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் சந்திரசேகர்(52), இவரது மனைவி செல்வி (45) சந்திரசேகர் மலேஷியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சந்திரசேகர் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தை ஏ.டி.எம் மில் எடுப்பதற்காக செல்வியும், மகன் நிதீஷும் காரைக்காலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டனர்.
மெயில் ரோட்டில் இருவரும் விழிதியூரிலிருந்து சேஷமூலை மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்புறமாக 3 பேர் பைக்கில் அதிவேகத்தில் வந்தனர். பைக் கட்டுப்பாடு இழந்து நடந்து வந்து கொண்டிருந்த செல்வி மீதி மோதியதில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் செல்வியை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து காரைக்கால் தெற்கு போக்குவரத்து போலீசாரிடம் செல்வியின் உறவினர் பாலமுருகன்(44) புகாரளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் பைக்கை ஒட்டி, விபத்தை ஏற்படுத்திய திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் அண்ணா மண்டபத்தைச் சேர்ந்த ஆஅபிஷேக்(21) என்பவரைக் கைது செய்து, அவருடன் பைக்கில் அமர்ந்து வந்த சஞ்சய்(18), தமிழ்வாணன்(22) இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.