திருநள்ளாரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்ற இருவரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.
திருநள்ளாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபால் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரக்குடி சாலையில் ஒருவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்றுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த போலீசார் சுரக்குடி சித்ரா காலணியைச் சேர்ந்த குமார் (48) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன், ரூ.130 ரொக்கம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
அதுபோல், பேட்டை சாராயக்கடைக்கு எதிரில் நின்று கொண்டு தடை செய்யப்பட்ட மூன்று இலக்க லாட்டரிகளை விற்பனை செய்து கொண்டிருந்த பேட்டை மெயின் ரோட்டைச் சேர்ந்த ராஜசேகரன் (42)என்பவரையும் கைது செய்தனர். ரொக்கம் ரூ.250 மாற்றும் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.