திருப்பட்டினத்தில் குடி போதையில் கரை ஒட்டி ஐ.டி.ஐ. மாணவர்கள் மீது மோதிய கடலோர காவல்படையின் வீரரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பட்டினம் போலகம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் கிருபாநிதி(16), இவர் அங்குள்ள அரசு ஆண்கள் ஐ.டி.ஐ-யில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர் கீழையூர் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த ஷாம்பிரகாஷ்(20) என்பவற்றின் பைக்கில் அமர்ந்து பயணித்துள்ளார்.
திருப்பட்டினம் மலையான் தெருவிலிருந்து காந்தி சாலையில் திரும்பும்போது எதிரில் வந்த கார் மோதியது. இவ்விபத்தில் பைக்கில் சென்ற இருவரும் கால், தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் இருவரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
படுகாயமடைந்து காரை அஜாக்கிரதையாக ஒட்டி விபத்தை ஏற்படுத்திய இந்திய கடலோர காவல் படையில் பணிபுரியும் கேரளா கஜரா பள்ளியைச் சேர்ந்த விஷ்ணுநாத்(32), மேலும் காரில் விஷ்ணுநாத்துடன் ஆபிராம், ஷாம்குமார் இருவரும் பயணித்தது தெரிய வந்தது.
குடிபோதையில் கார் ஓட்டியதால் விஷ்ணுநாத் மாணவர்கள் மீது காரை மோதியது தெரிய வந்தது. இதுகுறித்து கிருபாநிதியின் தந்தை பழனிவேல் புகாரின்பேரில், போதையில் கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்திய கடலோர காவல் படை வீரர் விஷ்ணுநாத்தை காரைக்கால் தெற்கு போக்குவரத்து காவல் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.