காரைக்காலில் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமா வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மின்கம்பத்தில் மோதி விபத்து. போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அம்பகரத்தூர் பகுதியில் இருந்து காரைக்கால் பேருந்து நிலையம் நோக்கி 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து காரைக்காலில் உள்ள நகராட்சி வார சந்தை அருகே பேருந்து அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காரைக்கால் அடுத்த பச்சூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர் மீது பேருந்து மோதியதில் அவர் அருகில் இருந்த வாக்காளியில் விழுந்ததால் அவருக்கு கடும் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் பேருந்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 10க்கு மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற பேருந்து விபத்தானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.