அத்திப்படுகை ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய விமான பாலஸ்தாபனம் நேற்று நடந்தது.
திருநள்ளாறை அடுத்த அத்திப்படுகை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள். உபயதாரர்கள் உள்ளனர். இக்கோயிலின் கும்பாபிஷேக பணிகளுக்கான வேலைகள் தொடங்கியது.
நேற்று கோயில் கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாலாலய பூஜைகள் நடைபெற்றன. திருநள்ளாறு என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் அத்திப்படுகை சிவகுமார் முன்னிலையில் நடைபெற்ற பூஜையை தொகுதி எம்.எல்.ஏ பி.ஆர்.சிவா முன்னின்று தொடங்கி வைத்தார். ராஜா சுவாமிநாதகுருக்கள் தலைமையில் பாலாலய பூஜைகள் நடைபெற்றன.
திருநள்ளாறு ஶ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்ட இத்திருக்கோயிலின் பாலாலய பூஜையில் கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அத்திப்படுகை கிராமவாசிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.