உலக இருதய தினம் - செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் இணைத்து உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.இப்பேரணியில் மதர் தெரசா செவியர் கல்லூரி மற்றும் இமாகுலேட் செவிலியர் கல்லூரி மாணவ மாணவியர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் கமலா வரவேற்புரை ஆற்றினார்.ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் குமரேசன் சிறப்புரை ஆற்றினார்.உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் சுபாஷ் இப்பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் நடந்து சென்றனர்.விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி விநாயகா மிஷன் புற சுகாதார நிலையம் வரை சென்று முடிவடைந்தது.