நெடுங்காடு வாதிருப்பு சாலையில் குடிநீர் குழாயில் புழுக்களுடன் அசுத்த நீர் வெளியான புகார் மீது சந்திரப்பிரியங்கா எம்.எல்.ஏவின் உத்தரவின்பேரில் பழைய குழாய்கள் அகற்றப்பட்டு, குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நெடுங்காடு வாதிருப்பு சாலையில் கொம்யூன் பஞ்சாயத்து குடிநீர் குழாய்களிலிருந்து புழுக்கள் கலந்த நீர் வருவதாக பொதுமக்கள் புகார்களைக் கூறினார். சிலர் நேரடியாக தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சந்திரப்பிரியங்காவிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வாதிருப்பு சாலையில் காணப்படும் அத்தனை குடிநீர் குழாய்களையும் சோதித்து ஒழுங்கு செய்ய சந்திரப்பிரியங்கா நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பாலனுக்கு தெரிவித்தார்.
ஆணையர் பாலன் தலைமையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் வாதிருப்பு சாலையில் இருந்த அணைத்தது குடிநீர் குழாய்களையும் சோதித்தனர். பழைய குழாய்களை அகற்றி, பழுதான குழாய்களுக்கு பதில் புதிய குழாய்களை பொருத்தினர். குடிநீர் குழாய் விநியோகத்தை நிறுத்தி, குழாய்களில் தேங்கியிருந்த நீரை நீரழுத்த மோட்டர்களைக் கொண்டு வெளியேற்றினர்.
அசுத்த நேர் வெளியேற்றப்பட்டு, புதிய குழாய்கள் வழியாக குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் சந்திரப்பிரியங்கா எம்.எல்.ஏவுக்கும், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்துள்ளனர்.