காரைக்காலில் சாலைகளில் கால்நடைகளைத் திரியாவிடக்கூடாது. இனிமேல் அவ்வாறு திரியாவிட்டால் ஊழியர்களால் பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். கால்நடை வளர்ப்போர் மீதும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆணையர் சத்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா நேற்று வெளியிட்ட அறிவிப்பு விபரம் வருமாறு:
காரைக்காலில் கால்நடைகளை வளர்ப்போர் அவர்களுக்குரிய பராமரிப்பு வசதிகளை அவர்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கால்நடைகளை சாலைகளில் திரியவிடாமல் கட்டுப்படுத்தி வளர்க்க வேண்டும். சமீபகாலமாக கால்நடைகளை முக்கிய வீதிகளில் திரிய விடுவதால், விபத்துக்கள் உயிரிழப்புகள் நேர்கின்றன.
பண்டிகளிக்காலம் என்பதால் பொதுமக்கள் சாலையில் செல்லும்போது சாலைபோக்குவரத்துக்கு இக்கால்நடைகள் பெரும் இடையூறாக உள்ளன. இந்த எச்சரிக்கையையும் மீறி கால்நடை வளர்ப்போர் தங்களின் கால்நடைகளை அதனதன் வசிப்பிடத்தில் வைத்தது பராமரிக்க வேண்டும். மீறினால், சாலைகளில் திரியும் கால்நடைகள் முன்னறிவிப்பின்றி பிடிக்கப்படும்.
கால்நடைகளுக்கு நகராட்சி சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டு, கால்நடை வளர்ப்போர் மீதும் சட்டக்ப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தனது அறிக்கையில் ஆணையர் சத்யா தெரிவித்துள்ளார்.