செல்லூரில் தன்னைக் கடித்த நாயின் உரிமையாளரை செங்கல்லால் தாக்கி திட்டிய நபர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருநள்ளாறை அடுத்த செல்லூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். ஜிப்மர் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக இவர் வளர்த்து வந்த நாய் குட்டி போட்டுள்ளது. இவரது வீட்டுக்கு எதிரில் வசிக்கும் சரவணன் என்பவரை அறிவழகனின் நாய் கடித்து விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து அறிவழகனின் வீட்டுக் கதவின் மீது வீசினார். இதனைத் தட்டிக்கேட்ட அறிவழகனின் மனைவி ராஜலட்சுமியை ஆபாசமாகத் திட்டி செங்கல்லால் தலையில் அடுக்கவந்தார். அதனைத் தடுக்கும்போது ராஜலட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டது.