இலவச சைக்கிள் தரமற்ற நிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது. நாஜிம் எம்.எல்.ஏ
காரைக்கால்
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 73 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் பேசுகையில் புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க நேரில் வர வேண்டும் என ஆசை இருந்தாலும்,இலவசமாக வழங்கப்படும் சைக்கிள்கள் தரமற்ற முறையில் இருப்பதால் மன வேதனை தருகிறது.வரும் காலங்களில் இது போன்ற குறைகள் வராமல் தடுக்க படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்து இருக்கிறார்.மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தாங்கள் பள்ளிக்கு வந்து போக இந்த சைக்கிள் உங்களுக்கு ஒரு உறுதுணையாக இருக்கும் எனவும் கூறினார்.