காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை கரீம் நகரில் அமைந்துள்ள வாய்காலில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய கால்வாய் பாலம் ரூ.7 லட்சம் செலவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.மேலும் காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட காரைக்கால் தெற்கு தொகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் உள்ளடக்கிய 9.500 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 2 லட்சத்து 60 ஆயிரம் செலவில் தூர்வாரும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
இப்பணிகளை காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் காரைக்கால் பொதுப்பணித்துறை, நீர்ப்பாசன மற்றும் பொது சுகாதாரக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் மகேஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப்பொறியாளர் அருள் அரசன் செய்திருந்தார்.