நெடுங்காட்டில் இட்லிக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நெடுங்காடு நல்லாத்தூர் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் நிர்மலா லூர்து(40) , இவரது கணவர் அம்புரோஸ் விவசாயம் செய்து வருகிறார். நிர்மலா லூர்து அப்பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சியாமளா ராணியை கடை உதவிக்காக வேலைக்கு வைத்திருந்தார்.
சியாமளா ராணியின் அக்காள் பாஸ்தா மேரி ஆத்திரமடைந்து நிர்மலா லூர்து வீட்டு வாசலுக்கு வந்து "என்னை கேட்காமல் என் தங்கையை எப்படி வேலைக்கு சேர்க்கலாம்" என்று வாதிட்டார். உன் தங்கையுடன் கோபமென்றால் உன் வீட்டிலேயே வைத்துக் கொள். எதற்காக என் வீட்டு வாசலின் நின்று சத்தம் போடுகிறாய்?" என்று நிர்மலா லூர்து கேட்டார்.
அன்று மாலை நிர்மலா லூர்தின் வீட்டு வாசலில் பாஸ்தாமேரியும், புதுக்கோட்டையைச் சேர்த்த நண்பர் சரவணனும் சேர்ந்து கொண்டு அசிங்கமாகத் திட்டினார். மேலும், ஆட்களைக் கொண்டுவந்து வீட்டைக் கொளுத்தி, ஒழித்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து நிர்மலா லூர்து நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.