காரைக்கால் கடற்கரையில்
சேதமடைந்து கிடக்கும் விளையாட்டு சாதனங்கள்
புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
காரைக்கால்,அக்.20:
காரைக்கால் மாவட்டத்தின் புராதன சுற்றுலா தலமாக விளங்குவது காரைக்கால் கடற்கரை ஆகும்.இங்கு உள்ளூர் மாவட்ட பொதுமக்கள் இன்றி அண்டை மாவட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வாசிகளின் முதன்மை சுற்றுலா தளமாக கடற்கரை பகுதி முன்னிலை பெறுகிறது.
இது தவிர இங்கு குழந்தைகளுடன் வருகை தரும் குடும்பத்தினர் கடற்கரை நுழைவு பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் கடற்கரை பகுதி,அதன் அருகில் உள்ள விளையாட்டு சாதனைகளில் தான் தங்களது விடுமுறையை கழித்து வருகின்றனர்.ஆனால் கடற்கரை பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து சிறுவர்கள் பயன்படுத்தும் தகுதியற்ற நிலையில் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சிவ கணேஷ் கூறுகையில் காரைக்கால் கடற்கரை பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது.மேலும் இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் சிறுவர் பூங்கா அருகே இருட்டில் சமூக விரோதிகளின் ஆதிக்கம் அதிகமாகி மது அருந்தும் கும்பல் அட்டுழியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறுவர் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் அருகே மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடப்பதால் சிறுவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.எனவே இரவு நேரத்தில் காவலர்கள் போதிய அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும்,சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.