Thursday 21 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

சர்ச்சை வலையில் சிக்கும் சந்திரபிரியங்கா  அமைச்சர் பதவி ராஜினாமா செய்த நிலையில் செய்தி குறிப்பில் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சர்ச்சை வலையில் சிக்கும் சந்திரபிரியங்கா அமைச்சர் பதவி ராஜினாமா செய்த நிலையில் செய்தி குறிப்பில் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நவீன் பாரத் Oct 20 2023 செய்திகள்

சர்ச்சை வலையில் சிக்கும் சந்திரபிரியங்கா அமைச்சர் பதவி ராஜினாமா செய்த நிலையில் செய்தி குறிப்பில் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

     புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், காரைக்கால் மாவட்ட நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆளும் என்.ஆர் - காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சந்திரபிரியங்கா.பின்னர் இவர் புதுச்சேரி மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.இந்நிலையில் தான் ஒரு பெண் என்பதால் பல்வேறு நிலையில் பாதிக்கப்படுவதாகும் ஜாதி ரீதியாகவும் பாலின ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த 10ம் தேதி தன்னை சாதி ரீதியாகவும்,பாலின ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக கூறி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கும்,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜனுக்கும் அனுப்பி வைத்தார்.

      ஆனால் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசுகையில் சந்திரபிரியங்கா ராஜினாமா செய்யவில்லை அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும்,சந்திர பிரியங்காவின் துறை சார்ந்த துறைகளில் குறைபாடுகள் இருப்பதாலும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் புதுச்சேரி சபாநாயகரும் அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துடன்,அவர் எம்.எல்.ஏ மட்டுமே என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காரைக்கால் அடுத்த நெடுங்காடு தொகுதியில் உள்ள குரும்பகரம் கிராமத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருள் கண்காட்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ சந்திரபிரியங்கா 9 நாட்களுக்கு பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

        இதற்கிடையில் சந்திர பிரியங்கா அமைச்சராக இருந்தபோது அவரது அலுவல் சார்ந்த செய்திகள் அனைத்தும், ’போக்குவரத்துத்துறை அமைச்சர்' என்ற வாட்ஸ்அப் குழு மூலமாகவே செய்தியாளர்களுக்கு அதிகாரபூர்வமாக பகிரப்பட்டது.அந்தக் குழுவில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்தான செய்தி குறிப்பானது  புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் என்று  பதிவிட்டு வெளியிட்டுள்ளனர்.



   மேலும் அமைச்சர் பதவி வார்த்தையின் எழுத்துக்களை பெரிதாக மற்றவர் தெரியும்படி அந்த எழுத்துக்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.அதாவது மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் திருமதி.Dr.சந்திர பிரியங்கா  என்று பதிவிட்டு அரசியல் வட்டாரத்தை மீண்டும் பரபரப்பாகி உள்ளார்.இதற்கிடையில்  அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்து வரும் நிலையில் சந்திர பிரியங்காவிற்கு இதுவரை துப்பாக்கி ஏந்திய காவலர் பணியில் இருந்து வருவதும்,தனது காரில் தேசிய கொடி பறக்க விட்டு வருவதும் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News