காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு சாலை, பேட்டை சாலை, குமாரகுடி சாலை, மற்றும் சுப்பராயபுரம் சாலை ஆகிய நான்கு இடங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.5 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான பணித்திட்டம் தயாரிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டு பணிகள் நேற்று துவக்கப்பட்டது.
இதற்கான பூமி பூஜையில் திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா தலைமையிலும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் முன்னிலையிலும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.மேலும் இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர் சிதம்பரநாதன்,உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால் அதற்குள் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.