நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகிறது.இதனிடையே காரைக்காலில் மூன்று தனியார் திரையரங்கள் உள்ளனர்.இதில் ஒரு தனியார் திரையரங்கம் மட்டுமே தற்போது இரண்டு ஸ்க்ரீன் கொண்டு செயல்பட்டு வருகிறது.
முதல் நாளே படம் பார்ப்பதற்காக லியோ படத்தின்ஆன்லைன் டிக்கெட் எடுப்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆன்லைனில் எப்போது டிக்கெட் வேலிடப்படும் என காத்து இருந்தனர்.ஆனால் ஆன்லைன் டிக்கெட் திறக்கப்படாமலேயே நாளை முதல் ஒரு மூன்று நாட்களுக்கு அணைத்து டிக்கெட்டுகளை விற்று தீர்ந்து விட்டதாக கூறி தனியார் திரையரங்கம் கூறப்படுவதாக தெரிகிறது.இதனால் முதல் நாள் படம் பார்ப்பதற்காக ஆவலுடன் எதிர்பாத்து காத்திருந்த நடிகர் விஜயின் ரசிகர்ககுக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்து இருக்கிறது.
இதுகுறித்து விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கூறுகையில் கடந்த ஆண்டுகளாக முதல் படம் வெளியாகும் போது ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படும்.இதனை மன்ற நிர்வாகிகள் முதற்கொண்டு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது வழக்கம்.ஆனால் தற்போது ஓரே ஒரு திரைரங்கில் மட்டும் படம் வெளியாவதால் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தலையீட்டால் ஆன்லைன் டிக்கெட் முறையை முடக்கி வைத்து விட்டு அணைத்து டிக்கெட்களையும் அவர்களே கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்குவது சரியான செயல்பாடல்ல.எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காரைக்கால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.