காரைக்கால் புதிய பஸ் நிலையத்தை ஒட்டி, புளியங்கொட்டை சாலை உள்ளது. இச்சாலையில் ஏராளமான கடைகள் மாற்று வணிக வளாகங்கள் உள்ளனர். அவற்றில் கலியமூர்த்தி என்பவர், ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.அவர் வருகிற தீபாவளியை முன்னிட்டு மாதிரிக்காக சிறிது வெடி பொருட்களை வாங்கி கடையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதோடு, கடையில் இருந்த சில மின் சாதன பொருட்கள்,வெடிபொருட்கள் உரசி நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து, காரைக்கால் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையில், நகர மற்றும் சுரக்குடியில் இருந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.மேலும் இது குறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.