நவீன் பாரத்
Oct 17 2023
செய்திகள்
காரைக்கால் அடுத்த மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பண்ணைண மகளிர் தினம் மற்றும் உலக உணவு நாள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிலைய முதல்வரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜெயசங்கர் தலைமை வகித்தார்.
பின்னர் பேசுகையில் விவசாயத்தில் மகளிரின் பங்கு, அவர்களது செயல்பாடுகள், வேளாண்மையில் மகளிரின் செயல்பாடுகளால் ஏற்படும் பிற வளர்ச்சி குறித்தும், இத்தகைய தினங்களை கொண்டாடுவதின் நோக்கம், முக்கியத்துவம், உணவு முறையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள். நவின உலகின் வாழ்வியல் முறைகள் குறித்து பேசினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாண்ட்போடு அகாடமி பள்ளியின் தாளாளர் ஷர்மிளாதேவி அனைத்து துறைகளிலும் மகளிரின் பங்களிப்பு, குறிப்பாக விவசாயத்தில் அவர்களின் ஈடுபாடு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள், சமுகத்தில் மகளிர் முன்னேற்றம் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து திருமலைராயன் பட்டினம் அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிறுவன பயிற்சி அலுவலர் சுகுணா பேசுகையில் வேளாண் அறிவியல் நிலையம் சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டை முன்னிட்டு சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் குறிப்பாக பண்ணை மகளிர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் சார்ந்த பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதோடு சமூகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என பாரட்டினர். மேலும் இன்றைய சூழலில் உணவு கலப்பிடம், ஊட்டச்சத்து குறைபாடுகளின் தாக்கம். உணவுப்பழக்கவழக்கங்கள், சரிவிகித உணவு முறைகளை குறிப்பாக மகளிர் வாழ்க்கையில் கடைபிடித்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் காரைக்கால் பகுதியில் விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடோடு செயல்படும் பண்ணை மகளிர், தொழில்முனைவோர், முற்போக்கு பெண் விவசாயி என செயல்படுவோரில் சிறந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விழாவின்போது மகளிர் குழுவினருக்கான உணவு கண்காட்சி, வினாடிவினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் செந்தில் வரவேற்றார். கதிரவன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 60க்கும் மேற்பட்ட பண்ணை மகளிர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.