காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு கொலு தர்பார் வெகு விமர்சையாக நடைபெறும்.நிகழாண்டு நவராத்திரி கொலு தர்பார் நேற்று இரவு தொடங்கியது.காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து நடைபெற்று வருகிறது.
நவராத்திரி கொலு தர்பார் கண்காட்சியை திருவாவடுதுறை ஆதீனம் குருமா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.பொதுமக்கள் மாலை நேரத்தில் கொலு அமைக்கப்பட்டுள்ள காட்சியைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த கொலு தர்பார் ஸ்ரீ நவநீதேஸ்வரர், ஸ்ரீ வேல்நெடுங்கண்ணி அம்மன், திருச்செந்தூர் சூரசம்ஹாரம், ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி அமர்ந்த திருமுறை நாதர் அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி, சபரிமலை ஐயப்பன் உள்ளிட்ட பல தெய்வங்களை காட்சிகளாக அமைத்திருந்தது அனைவரை கவர்ந்தது.