காரைக்காலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி
மாவட்ட நிர்வாகம் - தனியார் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் திசா பவுண்டேஷன்,இ.எல்.எப். இங்கிலிஷ் ஆகியன இணைந்து சில மாதங்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேச 80 நாட்கள் ஆசிரியர்களுக்கும் பிறகு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .
இத்திட்டம் மிகவும் வெற்றி பெற்ற நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இத் திட்டத்தை விரிவுபடுத்த கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் முயற்சியால் மேலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் மற்றும் வைகை இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் நிதி பங்களிப்புடன் காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் 41 அரசு பள்ளிகளை சேர்ந்த 3451 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க நேற்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆட்சியர் குலோத்துங்கன் கையொப்பம் இட்டார்.
இந்த நிகழ்ச்சியில் திஷா பவுண்டேஷன் நிர்வாகிகள் ஐஸ்வர்யா,தாரா மற்றும் மேற்பார்வையாளர் நிருபமா ஆகியோர் கலந்து கொண்டனர்.இத்திட்டத்தின் மூலம் மேற்கண்ட வகுப்புகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படும்.அதன் பிறகு நேரடியாக மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் இத்திட்டம் மார்ச் மாதம் வரை நடைபெறும் என மேற்பார்வையாளர் நிருபமா தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் திஷா பவுண்டேஷன் நிறுவனத்தின் மேலாளர் கர்னல் ஜோதி சங்கர்,வைகை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மேலாளர் வீரபாபு,முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா ஆகியோர் உடன் இருந்தனர்.