காரைக்கால் எல்லைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்
காவல் துறைக்கு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுரை
காரைக்கால் மாவட்டத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் சாலை பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஆட்சியர் குலோத்துங்கன் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன்,முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்தின் ரமேஷ் கவ்ஹால்(பொ), எஸ்.பி.சுப்பிரமணியன்(தெற்கு),
இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் குலோத்துங்கன் சென்ற முறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்ட பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டனவா என ஒவ்வொரு துறையாக கேட்டறிந்தார்.பின்னர் பேசிய அதிகாரிகள் பொதுப்பணித் துறையின் மூலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் குறுக்கு சாலைகளில் 37 ஸ்பீடு பிரேக்கர் கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றிற்கு வண்ணங்கள் பூசி முடிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.530 ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய ஆட்சியர் குலோத்துங்கன் காரைக்காலில் அமைந்துள்ள சாலைகளை தரமாக பராமரிக்க வேண்டும்.போக்குவரத்து துறை மூலம் ஆட்டோ விழிப்புணர்வு மற்றும் இரு சக்கர வாகன விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட வேண்டும்.பள்ளிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுவது சம்பந்தமான விழிப்புணர்வு நடத்தப்பட வேண்டும் என கூறினார்.
மேலும் காவல்துறையினர் சாலையில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவை பராமரிக்கும் படியும், காரைக்கால் எல்லைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்குமாறும் ஆட்சியர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அதிகமான விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்குமாறும் ஆட்சியர் குலோத்துங்கன் போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.