Saturday 23 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

காதலித்து திருமணமானவர்   ஓவர் போதை -உயிர் போனது
காதலித்து திருமணமானவர் ஓவர் போதை -உயிர் போனது
குணவதி Oct 09 2023 சற்றுமுன்

காதலித்து திருமணமானவர் ஓவர் போதை -உயிர் போனது

திருநள்ளாரில் காதலித்து திருமணமானவர்

-   ஓவர் போதை -உயிர் போனது 

திருநள்ளாரில் காதல் திருமணம் செய்த தொழிலாளி 21 வருடங்களாக குழந்தை இல்லாததால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி உயிரிழந்தார்.


திருநள்ளாறை அடுத்த தேனூர் தாமரை குளத்துத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(52), இவர் 21 ஆண்டுகளுக்கு முன் சரோஜா(48) என்பவரை காதல் திருமணம் செய்தார். சரோஜா திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

குழந்தை இல்லாததால் விரக்தியில் மதுப் பழக்கத்துக்கு பாலகத்துக்கு ஆளான குணசேகரன் கடந்த 6-ம் தேதி அதிக குடிபோதையில் சூரக்குடி பேருந்து நிறுத்தத்தில் சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சரோஜா சேர்த்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து சரோஜாவின் புகாரை ஏற்ற திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.